ஷங்கரின் அடுத்த பட ஹீரோக்கள் இந்த முன்னணி நடிகர்கள் தான்.. எடுத்தா டபுள் ஹீரோ படம் தானாம்!

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக இரண்டு முன்னணி நடிகர்களை ஒரே படத்தில் இணைத்து பிரமாண்ட படம் ஒன்றை எடுக்க உள்ளாராம் இயக்குனர் சங்கர். அதற்கான கதை விவாதம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

முன்னதாக சங்கர் 2.O என்ற பிரம்மாண்ட வெற்றி படத்திற்கு பிறகு கமலஹாசனுடன் இணைந்து பழைய சூப்பர் ஹிட் படமான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக உருவாகி வந்தனர். ஆனால் இந்தியன் 2 படம் ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.

அதுமட்டுமில்லாமல் இடையில் நடந்த விபத்து இந்தியன் 2 படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இதனால் கமலஹாசன் மற்றும் லைகா ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேற்கொண்டு இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டில் பாதியை குறைக்குமாறு சங்கருக்கு லைக்கா நிறுவனம் அழுத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் சங்கர் லைக்காவின் மீது அப்செட் ஆக இருந்தாராம். அதனால் இந்தியன் 2 படம் மேற்கொண்டு தொடர படுமா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் தற்போதைக்கு கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தை ஓரம்கட்டி விட்டதால் சங்கரும் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

முன்னதாக சங்கர் 4 ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் பெரிய சிக்கல் ஏற்பட்டதால் தற்போது தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் ராம்சரண் மற்றும் பவர்ஸ்டார் பவன் கல்யாண் ஆகிய இருவரையும் வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்க உள்ளாராம் சங்கர். இதனால் தற்போது இந்த படத்தின் மீது இந்திய அளவில் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக ஏற்பட்டுள்ளன. ஷங்கர் படங்கள் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ram-charan
ram-charan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்