Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலின் மிரட்டல் கேரக்டர்.. அட! அப்போ நடிக்க தெரியனுமே
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2. சமீப காலமாக தமிழக அரசின் நிலைப்பாடு சரியில்லாத காரணத்தால் அதற்கு ஏற்றாற்போல் ஸ்க்ரிப்ட் தயார் செய்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இதில் தற்போது காஜல் அகர்வாலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால், பிளாஷ்பேக்கில் வரும் கதாபாத்திரம். இந்தியன் படத்தில் சுகன்யா நடித்த கேரக்டரில் தற்போது காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். அதற்காக பழைய கலைகளை எல்லாம் கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சுகன்யாவின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் எனவும் அதற்கு காஜல் அகர்வால் எப்படி சரிப்பட்டு வருவார் எனவும் ஒரு கூட்டம் பேசிக்கொண்டுள்ளது.
85 வயது கதாபாத்திரம் என்றால் சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் தான். காஜல் அகர்வாலுக்கு நடிப்பெல்லாம் வராது எனவும் ஒரு குண்டை தூக்கி போட்டு வருகின்றனர் அந்த குழுவினர். இதனால் படக்குழு சற்று கலக்கத்தில் உள்ளது.
