fbpx
Connect with us

Cinemapettai

கமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.

News | செய்திகள்

கமல் – ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் இவர்கள் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு.

இந்தியன்

1996 இல் வெளியான படம். வர்மக்கலை, லஞ்சம், சேனாபதி அப்போதைய சூப்பர் ஹிட் சமாசாரங்கள். உலகநாயகன் ஆக இருந்த சமயத்தில் முதல் பார்ட் வெளியானது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் தலைவரான பிறகு ரெடி ஆகிறது இரண்டாம் பாகம்.

கட்டாயம் கமலின் அரசியல் என்ட்ரியை வலுப்படுத்தும் அம்சங்கள் நிறைய இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் முத்துராஜ் ஆர்ட் பார்த்துக்கொள்வது மட்டுமே உறுதியான தகவல். மற்றபடி சிம்பு, அனிருத், சித்தார்த், காஜல் அகர்வால் போன்ற பல பெயர்கள் அடிபட்டது.

Indian 2

அதே கெத்தான ஆக்ரோஷமான சேனாபதி, இரண்டாம் பாகத்தை சொல்லும் வகையில் வர்மக்கலையில் இரண்டு விரல்கள் என் பல விஷயங்கள் உள்ளது புதிய போஸ்டரில் . இந்நிலையில் இன்று வெளியான முதல் லுக் போஸ்டர் சில பல கேள்விகளுக்கு பதில் தந்துள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணகுமார் எழுதுகின்றனர். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் நம் பீட்டர் ஹெய்ன் அவர்களும் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கிறார்.

கமலின் கடைசி படமாக இருக்கும் பட்சத்தில் இரட்டிப்பு பிரம்மாண்டத்தை நாமமும் எதிர்பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top