இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்தியன். சுதந்தரப் போராட்டத் தியாகி, லஞ்சத்தை எதிர்த்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் படத்தின் மையக்கருவாக அமைந்தன. இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்காக ஷங்கர், கமல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள்.

இந்தியன் படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். சிறந்த கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காக வெங்கிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. மேலும் இந்தப் படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதன்பிறகு கமலும் ஷங்கரும் இணையும் சூழல் வந்தபோதும் அது நிறைவேறாத நிலையில் 21 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் இந்தியன். கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவான அந்த படம் ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது.

இந்த நிலையில், தற்போது இந்தியன்-2 படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. மீண்டும் கமல்-ஷங்கர் இணையும் இந்த படம் முழுக்க முழுக்க இன்றைய அரசியலை பேசப்போகிறது. அதில் ஊழலும் அடங்கும். ஆனால் இந்த படத்தில் மீண்டும் கமல் இரண்டு வேடங்களில் நடிக்கப்போகிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக இயக்குநர் ஷங்கர் ‘2.0’ படத்தை முடித்துவிட்டு ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவந்தன. இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த தகவலை சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் உறுதி செய்தார் கமல். இயக்குநர் ஷங்கரையும், தயாரிப்பாளர் தில் ராஜுவையும் அழைத்து இந்தியன் 2 உருவாக இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்தப் படம் குறித்து மேலும் சில தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியன் 2 முழுக்க முழுக்க இன்றைய அரசியலை பற்றிப் பேசப்போகிறதாம். அதில் முதல் பாகத்தை போல ஊழலை பற்றியும் பேசப்படும் என தெரிகிறது. ஆனால் முதல் பாகத்தை போல இந்தப் பாகத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடிக்கப்போகிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.Kamalhaasan_Hollywood

மேலும், தமிழில் இந்தியன்-2 என்ற பெயரில் வெளியாகும் அப்படம் தெலுங்கில் ‘பாரதியூடு 2’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளில் டப் செய்து வெளியிடுகிறார்களாம்.

அதோடு, ஷங்கர் இயக்கி வரும் படங்களுக்கு உலக அளவில் பெரிய வியாபாரம் இருந்து வருவதால், இந்தியன் படத்தை விடவும் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தியன் 2 தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.