Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar-indian2

Tamil Nadu | தமிழ் நாடு

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் பலி

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது.

lyca

lyca

இதற்கான செட் அமைக்கும் பணிகளை தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கிரேன்களில் ஏறி மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர்.

indian

indian

அப்போது கிரேனில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி திடீரென அறுந்து கிரேன் அப்படியே சரிந்து கீழே விழுந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மது (வயது 29), சந்திரன் (வயது 60), உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.

indian-2

indian-2

உதவி இயக்குநர் கிருஷ்ணன் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகன் என்பது தெரியவந்துள்ளது. சினிமாவை தனது மூச்சாக கொண்டு திறமையாக செயல்பட்டு தற்போது நம்மிடம் இருந்து பிரிந்த  கிருஷ்ணா மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

krishna

krishna

krishna

krishna

madhu

madhu

அனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சுமார் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top