fbpx
Connect with us

Cinemapettai

இன்றைய விபத்து மிகக் கொடூரமானது.. 3 பேர் உயிரிழந்தது குறித்து கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்றைய விபத்து மிகக் கொடூரமானது.. 3 பேர் உயிரிழந்தது குறித்து கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்

சென்னை: இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து  திரைப்பட கலைஞர்கள் மீது விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததற்கு நடிகர் கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே செம்பாக்கத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. சண்டைக்காட்சிகாக  நேற்று இரவு செட் அமைத்தது போது கிரேன் சரிந்து கீழே விழுந்தது. இதில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

kamal-twit

kamal-twit

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும். இவ்வாறு கமல்ஹாசன்  குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top