fbpx
Connect with us

Cinemapettai

10 நொடியில் உயிர் தப்பிய கமல்,காஜல்.. இந்தியன் 2 படப்பிடிப்பை நேரில் பார்த்த அமிர்தா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

10 நொடியில் உயிர் தப்பிய கமல்,காஜல்.. இந்தியன் 2 படப்பிடிப்பை நேரில் பார்த்த அமிர்தா

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த கோர சம்பவத்தில் இருந்து பத்து வினாடிகளில் உயிர் தப்பியுள்ளார் கமலஹாசன்.

சண்டைக்காட்சிகாக  நேற்று இரவு செட் அமைத்த போது கிரேன் சரிந்து கீழே விழுந்தது. இதில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளரான அமிர்தா ராம் இதை பற்றி கூறுகையில் தானும் இந்த விபத்தில் இருந்து தப்பியதாக தெரிவித்துள்ளார். கிரேன் சரிந்து இடத்தில் உள்ள கூடாரத்தில் தான் காஜல், கமலஹாசன், மற்றும் நான் அமர  இருந்ததாக தெரிவித்த அவர் பத்து வினாடிகளில் உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.

amirtha

amirtha

இந்த சம்பவம் இந்திய அளவில் உள்ள சினிமா பிரபலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமலஹாசனின் ரசிகர்கள் உயிர் தப்பியதே போதும் தலைவா, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அதே இடத்தில் பிகில் படம் எடுக்கும் போது ஒரு சம்பவம் நடந்ததாக  அமிர்தா ஐயர் கூறியிருப்பது ஷாக்கிங்காக உள்ளது. ஆனால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை காயங்களுடன் தப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

amirtha

amirtha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top