Sports | விளையாட்டு
பயமுறுத்திய பொல்லார்ட்.. பதம் பார்த்து போட்டுத் தள்ளிய இந்தியா
இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை பேட் செய்ய சொன்னது. அதன்படியே ரோகித் சர்மா, ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
ரோஹித் சர்மா 71(34) ரன்களில் அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பந்த் வழக்கம்போல் 0 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 21 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.
மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சிய ராகுல் 91 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடக்கத்திலேயே தடுமாறியது.
17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை கேப்டன் போல்லர்டு மற்றும் ஹெட் மேயர் ஆகியோர் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சிக்சர் மழை பொழிந்து கொண்டிருந்த நேரத்தில் குல்தீப் பந்துவீச்சில் ஹெட்மையர் 41 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து மிரட்டிய போல்லர்டு 68 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு விக்கெட்டுகள் சரிய வெஸ்ட் இண்டீஸ் இறுதியில் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
97 ரன்கள் குவித்த ராகுல் ஆட்டநாயகன் விருதையும், விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
