Connect with us
Cinemapettai

Cinemapettai

36 ரன்களை கட்டம் கட்டிய ஆஸ்திரேலியா.. தரமான சம்பவம் செய்த ரஹானே அண்ட் கோ!

Rahane

Sports | விளையாட்டு

36 ரன்களை கட்டம் கட்டிய ஆஸ்திரேலியா.. தரமான சம்பவம் செய்த ரஹானே அண்ட் கோ!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனை செய்தது. இந்திய அணியில் ரகானேவின் முறையான திட்டமிடுதலும், சிறந்த கேப்டன்சியுமே தான் இந்த வெற்றிக்கு முழுக்காரணம்.

விராட் கோலியிடம் இல்லாத சில விஷயங்களை ரஹானே மேற்கொண்டார். இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை வலுவடையச் செய்தார் ரஹானே. தோனி, கோலி இரண்டு பேருமே 4 பவுலர்களை வைத்து விளையாடும் போது, ரஹானே மட்டும் 5 பவுலர்களை தேர்வு செய்தார்.

3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என பவுலர்களை சரியாக பயன்படுத்திக்கொண்டு இச்சாதனையை செய்துள்ளார் ரகானே. இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டனாக ரஹானே எடுத்த முடிவுகள் எல்லாமே மிகவும் சிறப்பாகவும், ஆச்சர்யம் அளிக்க கூடிய வகையிலும் இருந்தது.

கே எல் ராகுலுக்கு வாய்ப்பளிக்காமல், ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு கொடுத்தது. அதன்பின் புதிய பந்திலேயே அஸ்வினை பவுலிங் செய்ய வைத்து விக்கெட் எடுத்தது. நிலைத்து நின்று சதம் அடித்தது, இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது போன்ற பல விஷயங்களை ரஹானே செய்து காட்டினார்.

Rahane-Cinemapettai.jpg

Rahane-Cinemapettai.jpg

இதுமட்டுமின்றி பவுலர்களை சரியான நேரத்தில் மாற்றி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அறிமுக போட்டியிலேயே முகமது சிராஜை சரியாக பயன்படுத்தினார்.

முக்கியமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா என்று இரண்டு ஸ்பின் பவுலர்களுக்கு இவர் பீல்டிங் செட் செய்த விதம் பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கே ரஹானே கேப்டன்சியை பார்த்து பிரம்மிப்படைந்தார்.

பேட்டிங் வரிசையில் உள்ள வீரர்கள் விக்கெட்டுகளை எளிதாக எடுத்து விடும் இந்திய அணி பவுலர்களின் விக்கெட்டுகளை எடுப்பதற்க்கு சற்று தடுமாறி தான் வருகிறது. இந்த தடுமாற்றம் காலங்காலமாக இந்திய அணியில் உள்ளது தான் என்று குறிப்பிடுகின்றனர்.

விராத் கோலி போல் ஆக்ரோஷம் காட்டாமல் மிகவும் பொறுமையாக நிதானத்தை கடைபிடித்து இந்திய அணிக்கு இந்த வெற்றியை பெற்று தந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top