ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணி 4-1 என வெல்லும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு எதிராக 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வரும் 17ல் சென்னையில் துவங்கவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி, படுதோல்வியை சந்திக்கும் என முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லட்சுமண் கூறுகையில்,’தற்போதுள்ள பார்மில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவு செய்யும். இத்தொடரை இந்திய அணி, 4-0 என கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.’ என்றார்.