fbpx
Connect with us

Cinemapettai

வெஸ்ட் இண்டீசை வேட்டையாடிய இந்தியா.. விராட் கோலி ருத்ர தாண்டவம்.. முறைச்சா இதுதான் கதி

Sports | விளையாட்டு

வெஸ்ட் இண்டீசை வேட்டையாடிய இந்தியா.. விராட் கோலி ருத்ர தாண்டவம்.. முறைச்சா இதுதான் கதி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ்-ன் சிம்மன்ஸ் மற்றும் லீவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

சிம்மன்ஸ் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து லீவிஸ் மற்றும் கிங் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இவர்களை தொடர்ந்து போல்லர்டு, ஹெட்மையர் என அனைவரும் சிக்ஸர் மழை பொழிந்தனர்.

இதில் ஹெட்மையர்(56) முதல் முறையாக டி20யில் அரைசதம் அடித்தார். இறுதியில் ஜேசன் ஹோல்டர் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்ய இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர்.

ரோஹித் வழக்கம்போல் சொதப்ப, லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடினார். அவருடன் கூட்டணி அமைத்த கேப்டன் கோலி ஆரம்பத்தில் தடுமாறினார். கே.எல். ராகுல்(62) அரைசதம் அடித்து அவுட்டானார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வில்லியம்சன் தேவையில்லாமல் வீராட் கோலியை சீண்டினார். அதுவரை பந்து சரியாக பேட்டில் படாமல் தடுமாறிக் கொண்டிருந்த வீராட் கோலிக்கு அதன்பிறகு தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது.

கோபமடைந்த கோலி, வழக்கம்போல் தனது ருத்ர தாண்டவத்தை ஆடி தீர்த்தார். இதனால் இந்திய அணி 8 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதில் வீராட்கோலி 50 பந்துகளில் 94 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top