Sports | விளையாட்டு
ஆஸ்திரேலியாவில் வைத்து அவங்களையே வச்சி செய்த இந்தியா. குத்தாட்டம் போட்டு வீடியோ
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் மூன்று வீரர்கள். அனைவரும் விராட் கோலி டாப்பில் இருப்பார் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென ரிஷப் பண்ட், புஜாரா பேட்டிங்கில் பட்டையை கிளப்பி உள்ளனர்.
அதில் புஜாரா 193 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முதல் காரணமாக இருந்தார். மழை வந்து கடைசி போட்டி டிராவில் முடிந்த பின் இந்தியா சீரியஸ் வின் என அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய டீம் குத்தாட்டம் வீடியோ போட்டு வெளியிட்டனர் இதனை ஆஸ்திரேலியா பத்திரிகைகளும் கொண்டாடி வருகிறது.
ரிஷப் பண்ட் ஆரம்பத்தில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினார். டோனி இடத்தில் ரிஷப் பண்ட் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் அதனை இப்பொழுது சரியாக செய்து சாதித்து விட்டார். ஆரம்பத்தில் அவர் ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் கடைசியில் புஜாராவின் மரண ஆட்டம் இந்தியா வெற்றி பெற பெரிய காரணமாக இருந்தது.
புஜாரா கூறியதாவது:-
இப்பொழுது நான் இருக்கும் இந்திய அணி மிகசிறந்த அணி. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது டீம் மிகவும் கடினமாக உழைத்து வெளிநாட்டில் தொடரை வென்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல. இதனால் இந்திய வீரர்களை மிகவும் பாராட்டுகிறேன்.
குறிப்பாக 4 வேகப்பந்து வீரர்கள் 20 விக்கெட்டை வீழ்த்துவது எளிதான விஷயம் அல்ல. எனவே அனைத்து வேகப்பந்து வீரர்கள் மற்றும் சுழற்பந்து வீரர்கள் பாராட்டப்படக் கூடியவர்கள்.
