Sports | விளையாட்டு
இந்தியாவின் பிரம்மாண்ட வெற்றி.. ரோகித் சர்மா, கோலி அதிரடிகள்
இந்தியா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 377 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்திய அணி 274 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் அகமது குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

virat-kohli-ravi-shastri
இந்த போட்டியில் ரோகித் சர்மா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்,
சர்வதேச அளவில் ஏழாவது முறையாக 150 ரன்களை கடந்து சாதனை படைத்த முதல் வீரர்
இப்போட்டியில் அவர் 4 சிக்சர்களை அடித்ததன் மூலம் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார் அவர் இதுவரை 195 சிக்சர்களை முதலிடத்தில் இருந்தார் ஆனால் இப்போது ரோஹித் 198 சிக்ஸர்களை அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்த இரண்டாவது வீரர். தொடர்ச்சியாக 9 தொடர்களில் சதமடித்து சாதனை படைத்திருக்கிறார். இதனால் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
