fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆஸ்திரேலிய கேப்டனை வெறுப்பேற்றிய இந்திய அணி.. இந்த வாட்டி மிஸ் ஆகாது என சவால் விட்ட கேப்டன்!

India-winning-2018-Cinemapettai

India | இந்தியா

ஆஸ்திரேலிய கேப்டனை வெறுப்பேற்றிய இந்திய அணி.. இந்த வாட்டி மிஸ் ஆகாது என சவால் விட்ட கேப்டன்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இரு அணியை சேர்ந்த வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக 71 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

ஆஸ்திரேலிய அணி கடந்த முறை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது, தன்னை மிகவும் வெறுப்படையச் செய்தது என அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் இருவரும் அணியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி கடந்த முறை நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் மோசமானது எனக் கூறியுள்ளார்.

தற்போது நடைபெற உள்ள தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இந்திய அணிக்கு மிகவும் சவாலாக இருப்பார்கள் என கேப்டன் பெய்ன் கூறியுள்ளார்.

Tim-Paine-Cinemapettai.jpg

Tim-Paine-Cinemapettai.jpg

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top