அடுத்த போட்டியில் பாகிஸ்தானை ஒழிக்க இந்தியா படுதோல்வி அடையும்.. பாகிஸ்தான் வீரர் சர்ச்சை

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி இந்தியா வேண்டுமென்றே அடுத்த இரண்டு போட்டிகளில் தோற்கும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பாசித் அலி கூறுவது என்னவென்றால் இந்தியாவின் டார்கெட் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையக் கூடாது என்பது மட்டுமே.  இதற்கு சாட்சியாக பாகிஸ்தான் பிரதமரை சாட்சிக்கு அளித்துள்ளார்.

முன்னாள் வீரரான இம்ரான் கானை சாட்சிக்கு அழைக்கும் இவர், 1992ல் நியூசிலாந்து வேண்டுமென்றே தோற்றதாகவும் கூறியுள்ளார். அதைபோல் இந்த முறையும் இந்தியா வேண்டுமென்றே தோல்வி பெற்று பாகிஸ்தானை உள்ளே நுழைய விடாது என்று சர்ச்சையாக பேசி உள்ளார். இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா வெற்றிக்காக போராடி கொண்டிருக்கும்பொழுது இந்த பேச்சி இந்திய ரசிகர்களிடையே பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி அடுத்த வரும் காட்சிகள் அனைத்தும் நாக் அவுட் என்பதால் இந்திய அணி கடும் பயிற்சியில் ஈடுபட்டு வெற்றிக்கான பாதையை கண்டிப்பாக தேடித்தரும்.

Leave a Comment