Sports | விளையாட்டு
யாருப்பா இந்த பசங்க! ஒரே போட்டியில் வெறித்தனம்.. அசத்தும் இந்திய வீரர்கள்
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 30 தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது இந்திய அணியின் சார்பில் வீரர்கள் ஒரு டெஸ்ட் மேட்சில் பல சாதனைகள் செய்துள்ளனர்.
- மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய வீரர் பும்ரா ஹாட்ரிக் சாதனை.
- மேலும் இந்த போட்டியில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
- இந்த போட்டியில் இந்திய வீரர் விஹாரி தனது முதல் சதத்தை விளாசினார்.
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்திய அணி 140 ஓவர்கள் பிடித்து 416 ரன்களை இலக்காக வைத்துள்ளது முதல் இன்னிங்சில். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 33 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போது விளையாடிக் கொண்டு வருகிறது மேற்கிந்திய அணி.

india-cricket
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
