india cricket

கான்பூரில் இந்தியா, நியூசிலாந்து மோதிய இறுதிப் போட்டியில், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நேற்று நடைபெற்றது. மூன்று போட்டிகள் இந்த ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் நியூசிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று 1-1 என சமநிலையில் இருந்தன.

india cricket

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசி கேப்டன் வில்லியம்சன், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். ரோஹித் ஷர்மா 147 ரன்களும், விராட் கோலி 113 ரன்களும் குவிக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.

அதிகம் படித்தவை:  "தல" தோனிய எவண்டா தப்பா பேசுனது… தோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த பழைய பங்காளி !

தொடர்ந்து களமிறங்கிய நியூசி அணியும் சிறப்பாக விளையாடியது. கோலின் மன்ரோ, வில்லியம்சன், டாம் லாதம் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

இறுதிக் கட்டத்தில் அந்த அணி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், புவனேஷ் மற்றும் பும்ரா முக்கியமான கட்டங்களில் யார்க்கர்கள் வீசி, நியூசிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.

cricket

கடைசி ஓவரில், 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக பந்து வீசிய பும்ரா 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிப் பெற்றது. இதனால், 2-1 என்ற கணக்கில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது.

இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.

அதிகம் படித்தவை:  வரதா புயலால் சென்னைய ஒன்றும் செய்ய முடியல.! நீங்கலாம்.?! CSK வை மாஸாக புகழ்ந்த பிரபலம்.!

கடந்த 9 ஒருநாள் தொடர்களில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 2015-16-ல் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-3 என இந்தியா இழந்திருந்தது.

cricket

மற்ற 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்றது 10-வது தொடராகும். இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றதால் 10-ல் 9 தொடரை இந்தியா கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டியில் இந்தியா, தனது சொந்த மண்ணில் மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.