Connect with us

Cinemapettai

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

rajini-politics

India | இந்தியா

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பொங்கலுக்கு வெளிவர இருக்கும் தர்பார் படத்தின் டப்பிங் வேலையில் மிக வேகமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இன்று ரஜினி மக்கள் மன்றம் மூலம் அரும்பாக்கத்தில் நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம், ரத்த தானம், கண் சிகிச்சை ஆகியவை  இலவசமாக செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அளவில் இதனை  தெரிவிப்பதற்காக ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

தமிழ்நாடு கடைசி நம்பிக்கை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற  ஹாஷ் டேக் இந்த நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு பின்  அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆகையால் அரசியலில் தேவைப்பட்டால் நானும் கமலும் ஒன்றுசேர்ந்து மக்களுக்காக பணியாற்றுவோம் என்ற முழக்கம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இவர்கள் இணைந்து மக்களுக்கான ஆட்சியை கண்டிப்பாக கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை  ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று களத்தில் இறங்கி வேலை பார்க்கும் அரசியல்வாதிகளை மக்கள்  கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.

chennai-rajini

chennai-rajini

https://twitter.com/imravee/status/1198439072999411712?s=20

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top