Connect with us

Cinemapettai

ஜெ., பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டார் – ஆதாரத்தை வெளியிடுகிறது இந்தியா டுடே பத்திரிக்கை

Politics | அரசியல்

ஜெ., பாய்சன் கொடுத்து கொல்லப்பட்டார் – ஆதாரத்தை வெளியிடுகிறது இந்தியா டுடே பத்திரிக்கை

ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்ட ஆதாரத்தை இன்னும் சற்று நேரத்தில் இந்தியா டுடே பத்திரிக்கை வெளியிடுகிறது.

ஜெயலலிதா, உடல்நல குறைவால் கடந்த ஆண்டு செப்.22 ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஜெ., மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவர் செப்.22 ஆம் தேதியே கொல்லப்பட்டார் என்று தகவல் வெளியானது.

ஜெயலலிதாவை, சசிகலா தாக்கியதாகவும், இதனால் அவர் கீழே விழுந்ததால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மற்றொரு புறம், ஜெயலலிதாவுக்கு தவறான சர்க்கரை நோய் மருந்துகள் கொடுக்கப்பட்டதாக ஒரு இ-மெயில் வெளியானது. மேலும், சசிகலா ஸ்லோ பாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொன்றதாக சிலர் தெரிவித்தனர்.

தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சசிகலா ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை இந்தியா டுடே பத்திரிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளதாக எச்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top