சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித்  அப்ரிடிக்கு இந்திய அணி வீரர்கள் தங்களது கையொப்பமிட்டு இந்திய கேப்டன் விராத் கோஹ்லியின் ஜெர்சியை நினைவு பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்த ஷாஹித் அப்ரிடி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் என்னதான் எதிரி நாடாக பாகிஸ்தான் பார்க்கப்பட்டாலும் அரசியலை கிரிக்கெட்டுடன் இணைக்க விரும்பாத  இந்திய கிரிக்கெட்  வீரர்கள் இந்திய கேப்டன் கோஹ்லியின் ஜெர்சியில் தங்களது கையொப்பமிட்டு அதில் “அப்ரிடி பாய் வாழ்த்துக்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சி” என்று எழுதி அதனை ஷாஹித் அப்ரிடிக்கு நினைவு பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த ஜெர்சியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.