fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தோனி இடத்தைப் பிடிக்க போராடும் 5 விக்கெட் கீப்பர்கள்.. இந்திய அணியில் இடம் யாருக்கு.?

Sports | விளையாட்டு

தோனி இடத்தைப் பிடிக்க போராடும் 5 விக்கெட் கீப்பர்கள்.. இந்திய அணியில் இடம் யாருக்கு.?

ஒரு காலத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் என்றால் அது நயன் மோங்கியா மட்டுமே. மோங்கியாவை வைத்தே பல ஆண்டுகளை ஒட்டி விட்டது இந்திய அணி.

அவருக்கு முன் இந்திய அணியில் ஓரளவு தாக்கு பிடித்த கீப்பர் என்றால் கிரண் மோரே மற்றும் சையத் கிர்மாணி போன்றவர்களைக் கூறலாம்.

மோங்கியாவிற்கு பின் இந்திய அணியில் ஒரு பெரிய வெற்றிடமே உருவாகியது.விஜய் தாகியா, சமீர் டிகே, பார்த்தீவ் பட்டேல், அஜய் ராத்ர போன்றவர்கள் வருவதும் போவதுமாய் இருந்தனர்.

பார்த்தீவ் பட்டேல் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து சிலகாலம் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவரும் தன்னுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்த வில்லை என்றே கூறலாம்.

பின் கங்குலி தலைமையில் உலகக் கோப்பை சென்ற இந்திய அணியில், புதிய மாற்றமாக ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பிங் செய்ய கங்குலி தேர்ந்தெடுத்தார்.

அவர் விக்கெட் கீப்பிங் செய்வதால் இந்திய அணியில் பேட்டிங் ஆர்டர் வலுப்பெற்றது. மேலும் அவர் பகுதிநேர விக்கெட் கீப்பர் ஆகவே செயல்பட்டார்.

2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக அறிமுகமானார் மகேந்திர சிங் தோனி. அவர்தம் அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார். பின் இந்திய அணியின் கேப்டனாகவும் தலைமையேற்றார்.

தோனி தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான கோப்பைகளையும் வென்று பல சாதனைகளை பெற்றது.

தற்போது இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு போட்டியாக ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கே எல் ராகுல் போன்ற பல இளம் வீரர்கள் உள்ளனர்.

keepers-indian-team

keepers-indian-team

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top