Tamil Cinema News | சினிமா செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் ! இரண்டு ஆச்சிர்யமான தேர்வு !

டீம் இந்தியா
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் ஆறு வாரங்களில் இந்திய அணி ஐந்து போட்டிகள் விளையாட உள்ளது. இந்திய அணிக்கு இந்த தொடர் கடும் சவாலான ஒன்று தான். நீண்ட தொடர் என்பதால் 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. மேலும் முதல் மூன்று போட்டிகளுக்கு ஆன அணியை மட்டுமே அறிவித்துள்ளது தேர்வாணையம்.

Team India
பலரும் ரோஹித் சர்மா இடம் பெறுவார் என்று நினைத்த நிலையில் கருண் நாயர் தன் இடத்தை தக்கவைத்துள்ளார். அதே சமயம் குல்தீப் யாதவும் அணியில் உள்ளார்.
காயத்தில் இருக்கும் பும்ரா முதல் போட்டியில் ஆட மாட்டார். மேலும் முதுகில் உள்ள பிரச்சனை காரணமாக புவனேஸ்வர் குமாருக்கு பதில் ஷரத்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக சாஹா இடம் பெறவில்லை, தினேஷ் கார்த்திக் கீப்பராகவும், அவருக்கு பேக் அப்பாக பார்திவ் படேல் இடம் பெறுவார் என்ற நிலையில் இளம் வீரர் ரிசப் பண்ட சேர்க்கப்பட்டுள்ளார்.
