fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கடைசி T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? ரிஷப் பந்த் அணியில் இடம் கிடைக்குமா?

india-t20

Sports | விளையாட்டு

கடைசி T20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா? ரிஷப் பந்த் அணியில் இடம் கிடைக்குமா?

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது போட்டி மொகாலியில் நடைபெற்றது இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை சமநிலை செய்ய முனைப்புடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரைக்கும் இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியா அணி விளையாடியுள்ளது. இதில் இந்தியா இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இந்த ஆடுகளம் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக அமையும் இதனால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இன்றைய போட்டி இருக்கும்.

கடந்த போட்டியில் மிடில் ஆர்டரில் ரிஷப் பேண்ட் பேட்டிங்கில் சொதப்பியதால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் இப்போட்டி நடைபெற குறைவான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது இதனால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Sports | விளையாட்டு

அதிகம் படித்தவை

To Top