fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோப்பையை கோட்டை விட்ட இந்தியா.. அதிரடி காட்டிய சவுத் ஆப்பிரிக்கா.. சமநிலையில் முடிந்த T20 தொடர்

india vs south africa

Sports | விளையாட்டு

கோப்பையை கோட்டை விட்ட இந்தியா.. அதிரடி காட்டிய சவுத் ஆப்பிரிக்கா.. சமநிலையில் முடிந்த T20 தொடர்

இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். அதன்படி வழக்கம்போல் ரோகித் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.

சவுத் ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாத இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறினார். சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு வெறும் 134 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் மட்டுமே அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனை தொடர்ந்து பேட் செய்த சவுத் ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 140 எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. சவுத் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் குவின்டன் டி காக் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.

சவுத் ஆப்பிரிக்கா அணியின் பி ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். கேப்டன் டி காக் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று கோப்பையை சரிசமமாக வென்றனர். முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top