fbpx
Connect with us

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டீம்மின் விவரம் வெளியானது- 4 தமிழக வீரர்கள் உள்ளே

indian-team

Sports | விளையாட்டு

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய டீம்மின் விவரம் வெளியானது- 4 தமிழக வீரர்கள் உள்ளே

ஐபிஎல் முடிந்த உடன் அப்படியே அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்கின்றனர் இந்திய டீம். அங்கு சென்று கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் பயிற்சியில் ஈடுபடுவர்.

ஒரு நாள் போட்டிகள், டி 20 , மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளனர். அனைத்தும் பார்மட் வீரர்களும் இம்முறை ஒரு சேரவே கிளம்பி சென்று விடுகின்றனர். கொரோனா பரவல் இதற்கு முக்கிய காரணம்.

டெஸ்ட் போட்டியில் வழக்கம் போல ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார். டி 20 டீம்மில் ஆல் ரௌண்டார் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி இடம் பிடித்துள்ளனர். சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் டீம்மில் ஆடி வரும் டி நடராஜன் பேக் அப் பௌலர் ஆக டீம்முடன் பயணம் செய்கிறார்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஐபிஎல் டீம்களில் இடம் கிடைக்காத புஜாரா மற்றும் ஹனுமத் விஹாரி இருவரும் துபாய் சென்று சேர்த்துவிட்டனர். டெஸ்ட் போட்டிகளில் முரளி விஜய்க்கும், ஒரு நாள் போட்டிகளில் விஜய் சங்கருக்கும், டி 20 யில் தினேஷ் கார்த்திக்கும் இடம் கிடைக்கவில்லை.

Team India

காயம் காரணமாக உள்ள ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா இருவருக்கும் எந்த டீமிலும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் அவர்கள் பற்றிய முடிவை பிசிசிஐ எடுக்கும். ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ராகுல், சாம்சன் என இருவர் டி 20 யில் விக்கெட் கீப்பிங் கவனிக்க, ஒரு நாள் தொடரில் ராகுல் மட்டுமே. மேலும் ராகுலுக்கு துணை கேப்டன் போஸ்டும் வழங்கியுள்ளனர். டெஸ்டில் ரஹானே துணை கேப்டன். பண்ட் மாற்றும் சாஹா கீப்பிங்.

டெஸ்ட் டீம் – விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், விரிதிமான் சாஹா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ்

ODI டீம் – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

டி20 டீம் – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி

இவர்கள் தவிர்த்து கார்த்திக் தியாகி, கமலேஷ் நாகர்கோட்டி, நடராஜன், இஷான் போரல் ஆகிய நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் டீமுடன் செல்கின்றனர்.

முதல் போட்டி நவம்பர் 27 துவங்குகிறது.

Continue Reading
To Top