வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வங்கதேச அணி திணறி வருகிறது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்  டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 687 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில்  1 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தது. இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தை துவங்கிய வங்கதேச அணிக்கு, தமிம் (25) ரன் அவட்டானார். மாமினுல் ஹக் (12), மகமதுல்லா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார், ஷாகிப் அல் ஹசன் மட்டும் நிதானமாக விளாயாடி 82 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

இதன் மூலம் வங்கதேச அணி 87வது ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 267 ரன்கள் எடுத்து, 420 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து விளையாடி வருகிறது.