புகைப்பழக்கத்தால் அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.

1990-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் புகைப்பழக்கம் அதிகமாக உள்ள 195 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், புகைப்பழக்கத்தால் அதிகமானோர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.

2015-ம் ஆண்டில் மட்டும் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்தியாவில் 63.6% பேர் இறந்துள்ளனர். மேலும் இறப்பு மற்றும் மந்தத் தன்மைக்கும் புகைப்பழக்கம் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினமும் 5,500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புகைப்பொருட்களைப் பயன்படுத்த தொடங்குகிறார்கள்.