மீண்டும் இந்தியாவிடம் அவமானப்பட்ட பாகிஸ்தான்.. உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த தல,தளபதி ரசிகர்கள்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் ஆன இஸ்ரோ நிறுவனம் சந்திராயன்-2 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த சந்திராயன்-2வின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சந்திரனுக்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்போது தனது தகவல் தொடர்பை இழந்தது. இதனால் சந்திராயன்-2 நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடியாமல் போனது.

நேற்று அதிகாலை 1.40 மணிக்கு நேரலையில் காண்பிக்கப்பட்ட இக்காட்சி இந்தியரின் கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், எந்த நாட்டினரால் செய்ய இயலாத யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு சந்திரனின் தென்மண்டல பகுதியை ஆராய்வதற்காக இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் அனுப்பியது.

உலக நாடுகள் அனைவரும் இந்தியாவின் முயற்சியை பாராட்டி வரும் நிலையில், பிரதமர் மோடியும் இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித்தழுவி பாராட்டியது மேலும் இஸ்ரோ அமைப்பை ஊக்குவித்து. இஸ்ரோ தலைவரும் விண்வெளி ஆராய்ச்சியாளருமான சிவன், அடுத்த வருடத்தில் இதனை வெற்றியுடன் முடிப்போம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் கேவலமான செயல் ஒன்றை செய்துள்ளது. அது என்னவென்றால், #FailedIndia என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்தியாவை கேவலப்படுத்த முயன்றது. ஆனால் நம் இந்திய சமூக வலைதள வாசிகள் இதற்கான பதிலை அவர்கள் ஸ்டைலிலேயே திருப்பி கொடுத்துள்ளனர்.

அதாவது #WorthlessPakistan, #ProudtobeIndian போன்ற Hashtagகளை உருவாக்கி ட்ரெண்டிங் செய்துள்ளனர். எப்போதும் அடித்துக்கொள்ளும் தல தளபதி ரசிகர்கள் நேற்று ஒன்று சேர்ந்து பாகிஸ்தானின் ஹேர் ஸ்டைல் ஒன்றுமே இல்லாத அளவிற்கு வச்சு  செய்துவிட்டனர்.

எத்தனை வாட்டி தான் இந்த பாகிஸ்தான் காரங்க நம்மகிட்ட மொக்கை வாங்குவாங்கனே தெரியமாட்டது.

Leave a Comment