20 ரன்கள் கடப்பததே கஷ்டம்.. மொத்தமாக அணி தேர்வில் சொதப்பிய விராட் கோலி! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

நாளை தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அடிலெய்டில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தேர்வு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சிப் போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.மாறாக ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹாவுக்கு அணியில் இடம் அளித்துள்ளது.

சாஹா ஏற்கனவே காயத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் பயிற்சி போட்டியிலும் பங்கேற்கவில்லை.ப்ரித்வி ஷா பயிற்சிப் போட்டியில் நன்றாக விளையாடவும் இல்லை, அவர்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

Saha-Prithiv-Cinemapettai.jpg
Saha-Prithiv-Cinemapettai.jpg

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆட உள்ளனர்.

மேலும் ஒதுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, நவதீப் சைனி, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில்,முகமது சிராஜ் போன்ற வீரர்கள் உள்ளனர்.

Rishap-Shubam-Cinemapettai.jpg
Rishap-Shubam-Cinemapettai.jpg

ஷுப்மன் கில், ரிஷப் பண்ட்டுக்கு பதில் அணியில் ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹா இடம் பெற்றுள்ளனர். கில், பண்ட் உடன் ஒப்பிடும் போது அவர்கள் இருவரும் அதிக ரன்கள் குவிப்பார்களா? என்பது சந்தேகமே. அவர்கள் 20 ரன்கள் கூட தாண்ட மாட்டார்கள் அவர்களை எடுத்தது வீன் என்று ரசிகர்கள் காட்டம் தெரிவிக்கின்றனர்.