புதுடெல்லி: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, கோலியை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

அதிகம் படித்தவை:  முடியல.....மும்பையின் வெற்றியை தடுக்க டெல்லியால் : ரபாடா, மோரிஸ் போர் வீண்!

இதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இந்திய அணி பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சிஐ.,) அறிவித்தது. இந்நிலையில் இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். அதனால் கோலியை மட்டும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில்,’ இந்திய கேப்டன் கோலி, அணியின் ஒருவீரர் தான். அவர் சிறப்பாக விளையாடுவதால் தான் அணியில் இடம் கிடைத்துள்ளது. போட்டியின் போக்குக்கு ஏற்ப விளையாடும் திறமை படைத்தவர் அவர். அதற்காக இந்திய அணியின் சேஷிங் முழுவதுமாக அவரை மட்டுமே நம்பியுள்ளது என்று அர்த்தமில்லை.’ என்றார்.