fbpx
Connect with us

Cinemapettai

2017 உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு. போட்டோ ஆல்பம் உள்ளே.

News | செய்திகள்

2017 உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு. போட்டோ ஆல்பம் உள்ளே.

சீனாவில் உள்ள சான்யா நகரில் இந்த ஆண்டுக்கான 67-வது உலக அழகி போட்டி நேற்று  நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 அழகிகள் இதில் கலந்துகொண்டனர்.  இந்தப் பிரமாண்ட அழகிப் போட்டியில், இந்தியா சார்பாக ஹரியானாவைச் சேர்ந்த 21 வயது மருத்துவ மாணவி மனுஷி சில்லர் (Manushi Chhillar) கலந்துகொண்டார். இறுதிச்சுற்றில் அவர் வெற்றிபெற்று உலக அழகியாக கிரீடம் சூட்டப்பட்டார்.

17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீண்டும் உலக அழகியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் (1994) , பிரியங்கா சோப்ரா (2000 ), உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டனர்.

வெற்றி மகுடத்தை தட்டிச் சென்றவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லார். இந்த ஆண்டுக்கான இந்திய அழகியாகவும் தேர்வானார். தற்போது அவர் மருத்துவம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நன்றாக படம் வரையும் திறமையும் கொண்டவர். தேர்ந்த  பாரத நாட்டிய டான்ஸரும் கூட. ஹார்ட் சர்ஜன் ஆகி இந்திய முழுக்க இலவசமாக மருத்துவம் பார்க்கும் ஹாஸ்பிடல்கல் கட்டுவதே இவரின் குறிக்கோள்.

பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ், கென்யா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

Top 5 Contestants for Final Round

அப்பொழுது அவர்களிடம் கேட்டகப்பட்ட கேள்வி அதற்க்கு அவர்கள் சொன்ன பதில் இது தான்..

ஸ்டெபானி ஹில்; மிஸ் இங்கிலாந்து

உலக தலைவர்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தால், என்ன பேசுவீர்கள் ?

உலகளவில் மருத்துவ துறையில் உள்ள வேறுபாடை பற்றி பேசுவேன். தடுப்பூசிகளும், மருந்துகளும் உள்ளது. இந்த வேறுபாடை சரி செய்ய முடியும்.

ஆரோரே கிச்செனின்; மிஸ் பிரான்ஸ்

இந்த உலகிலேயே சிறந்த கண்டுபிடிப்பு எது? ஏன் ?

சிறந்த கண்டு பிடிப்பு போக்குவரத்து தான். பல நாடுகளுடன் தொடர்பில் இருக்க உதவுகிறது.

மனுஷி சில்லர், மிஸ் இந்தியா

எந்த வேலைக்கு அதிக சம்பளம் தரவேண்டும். ஏன் ?

அம்மா என்றவருக்கு தான் அதிக மரியாதையை தர வேண்டும். பணம் ஒரு விஷயம் அல்ல . அன்பு மற்றும் பாசத்தை தான் நாம் மற்றவருக்கு தர வேண்டும். என் அம்மா தான் எனக்கு இன்ஸ்பிரஷன். அம்மாவாக இருப்பவருக்கு தான் உலகிலேயே அதிக பட்ச சம்பளத்திற்கு தகுதியானவர்கள்.

மக்லீன் ஜெரூடோ; மிஸ் கென்யா

இணையம் மூலம் ஒருவரை தொல்லை செய்வது பெரிய பிரச்சனை ஆக உள்ளது. அதை எப்புடி தடுப்பது?

இந்த உலகிலேயே இது மிகவும் கொடுமையான ப்ரோப்லேம் தான். அதை தடுத்தே ஆக வேண்டும்

ஆண்ட்ரியா மேசா; மிஸ் மெக்ஸிகோ

உலக அழகியிடம் இருக்க வேண்டிய முக்கிய பண்பு என்ன ?

அன்பு மட்டும் தான் அது. அதையே அவள் வெளி கொண்டு வர வேண்டும். அவள் அனைவரையும் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

இதன் பின் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் இங்கிலாந்து, ஸ்டெபானி ஹில்  மற்றும் மிஸ் மெக்ஸிகோ, ஆண்ட்ரியா மேசா அடுத்த இடங்களை பிடித்தனர் .

Miss world 2016 Stephanie Del Valle of Puerto Rico crowns the new Miss World 2017 Manushi Chhillar

Manushi Chhillar the winner with runner up Andrea Meza(L) & Stephanie Hill(R)

Manushi Chhillar with her parents

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

அதிகம் முறை உலக அழகி பட்டம் வென்ற நாடு என்பதில் இந்தியாவும், வெனிஸுலாவும் முதல் இடம் பிடித்துள்ளனர்.

India: 1966, 1994, 1997, 1999, 2000, 2017

Venezuela: 1955, 1981, 1984, 1991, 1995, 2011

உலக அழகி ஆன இவர் மருத்துவர் ஆவாரா, இல்லை சினிமாவில் குத்துப்பாடல்களுக்கு நடனம் ஆடுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். வி ஆர் வைட்டிங்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top