Australia bats during

கடந்த ஜூலை 2ல் வெஸ்ட் இண்டீசிடம் (இடம்-ஆன்டிகுவா) இந்தியா தோல்வியடைந்தது. பின், எழுச்சி கண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (1), இலங்கை (5 ), ஆஸ்திரேலியாவை (3) வீழ்த்தி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. நேற்றைய போட்டியிலும் வென்றிருந்தால் முதல் முறையாக ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 10 வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கலாம்.

இந்திய அணி தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டியில் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. நான்காவது ஒரு நாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், சந்தித்து வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா 3-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. நான்காவது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது.

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ், பும்ரா, புவனேஷ்வருக்கு ஓய்வு தரப்பட்டு, முகமது ஷமி, உமேஷ் யாதவ், அக்சர் படேல் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், ஆஷ்டன் ஏகார் நீக்கப்பட்டு மாத்யூ வேட், ஆடம் ஜாம்பா இடம் பிடித்தனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய வார்னர், அக்சர் படேல் வீசிய 15வது ஓவரில் தொடர்ந்து ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். தன் பங்கிற்கு சகாலின் 27வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பின்ச் அரை சதம் எட்டினார்.

அதிகம் படித்தவை:  உலகக் கோப்பையை வென்ற அதே நாளில், ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருதை பெற்ற தோனி ! வைரல் வீடியோ உள்ளே !

இந்த ஜோடியை கேதார் ஜாதவ் பிரித்தார். 35 ஓவரில் 231 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாதவ் வீசிய பந்தை தூக்கியடித்த வார்னர் அக்சர் படேலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவர் 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ரன்கள் எடுத்தார்.

அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அப்போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது.

வார்னர் ஒரு நாள் அரங்கில் 14வது சதம் அடித்தார். இவர் 124 ரன்களில் ஆட்டமிழந்தார். உமேஷ் ‘வேகத்தில்’ பின்ச் (94), கேப்டன் ஸ்மித் (3) சிக்கினர். டிராவிஸ் ஹெட் 29 ரன்களில் அவுட்டானார். ஹேண்ட்ஸ்கோம்ப் (43) அதிரடியாக செயல்பட, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (15), மாத்யூ வேட் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின், களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், ரகானே அபார துவக்கம் தந்தனர். கம்மின்ஸ் பந்தை ரோகித் சிக்சருக்கு பறக்கவிட்டார். தன் பங்கிற்கு ஸ்டாய்னிஸ் பந்தை ரகானே பவுண்டரிக்கு விரட்டினார். இருவரும் அரை சதம் கடந்தனர். ரிச்சர்ட்சன் பந்தில் ரகானே (53) ஆட்டமிழந்தார்.

அதிகம் படித்தவை:  சர்வதேச கிரிகெட் போட்டியில் New year அன்று சதம் விளாசிய கிரிகெட் வீரர்கள் விவரம்!

ரோகித் (65) ரன்-அவுட்டானார். கூல்டர் ‘வேகத்தில்’ கோஹ்லி (21) சிக்கினார்.

அதிரடி வீரரான ஹர்திக் பாண்ட்யா 40 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. கேதார் ஜாதவ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 67 ரன்கள் சேர்த்தார். மணீஷ் பாண்டே 33 ரன்களும், டோனி 13 ரன்களும் அடித்தனர்.

ஜாம்பா ‘சுழலில்’ பாண்ட்யா (41) அவுட்டானார். சிறப்பாக செயல்பட்ட ஜாதவ் அரை சதம் கடந்தார். மழை குறுக்கிட, போட்டி சில நிமிடம் பாதிக்கப்பட்டது. பின், போட்டி துவங்கியதும் கூல்டர் பந்தை மணிஷ் பாண்டே சிக்சருக்கு பறக்கவிட்டார். ஜாதவ் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் ‘வேகத்தில்’ பாண்டே (33) அவுட்டானார்.

ஒரு சிக்சர் விளாசிய தோனியும் (13) அணியை கைவிட்டார். கூல்டர் பந்தில் அக்சர் (5) வெளியேறினார்.இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஷமி (6), உமேஷ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ரிச்சர்ட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார். இத்தொடரில் ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் அக்.,1ல் நாக்பூரில் நடக்கவுள்ளது.