fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நாங்க என்ன சொம்பையா.? முதல்ல அந்த 3 பேர சமாளிச்சு காட்டுங்க.! ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்ட சின்ன டிராவிட்

cheteshwar-pujara

Sports | விளையாட்டு

நாங்க என்ன சொம்பையா.? முதல்ல அந்த 3 பேர சமாளிச்சு காட்டுங்க.! ஆஸ்திரேலியாவுக்கு சவால் விட்ட சின்ன டிராவிட்

ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது 71 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அப்போது ஆஸ்திரேலிய அணி பலவீனமாக இருந்ததாகவும், ஸ்மித் வார்னர் அணியில் இடம் பெறாததால் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் முதல் டெஸ்ட் போட்டியுடன் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்புவதால் இந்திய அணி பலவீனமாக இருக்கும் என்று சிலர் கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

ஆனால் இந்திய அணி நிச்சயம் அவர்களை வீழ்த்தும் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்.

இந்திய அணியில் திறமையான பவுலர்கள் உள்ளனர். எப்பேர்பட்ட பேட்ஸ்மேன்களையும் சமாளிக்கக்கூடிய, வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். குறிப்பாக பும்ரா, இசாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரை மீண்டும் இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.

சமீப காலமாக இந்திய அணியின் பந்து வீச்சு எதிரணியினரை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் கூறினார். இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி அடிலைட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Smith-warner-Cinemapettai

Smith-warner-Cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top