Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியாவிலேயே முதல்முறையாக விஜயிற்கு கிடைத்த லக்
விஜய் பிறந்தநாளை வெளியிடப்பட்டு இருக்கும் காமன் டிபி இந்தியாவிலேயே அதிகமானவர்களால் ஷேர் செய்யப்பட்டு இருப்பது தளபதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
கோலிவுட்டின் ஸ்டார் ஐகான் விஜய் தனது பிறந்தநாளை இன்னும் சில நாட்களில் கொண்டாட இருக்கிறார். இதற்காக ஏற்பாடுகளை செய்து காத்திருந்த ரசிகர்களுக்கு விஜயின் அறிவிப்பு பேரிடியாக வந்தது. சமூக பிரச்சனைகளில் அடிக்கடி தனது கருத்துக்களை முன் வைக்க தவறாதவர் விஜய். தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் பலியான 13 பேரை சமீபத்தில் நேரில் சந்தித்தார். அவர்கள் கடும் கஷ்டத்தில் இருக்கும் வேளையில், கொண்டாட்டங்கள் கூடாது என முடிவு செய்த விஜய், தனது பிறந்தநாளை ரத்து செய்தார். அந்த நாளில் தனது 62வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அமெரிக்காவிற்கு கிளம்பி சென்று விட்டார். இதனால், ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
ஆனாலும், விஜய் பிறந்தநாளை அவர் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். அந்த வகையில், ட்விட்டரில் தளபதி பர்த்டே ஸ்பெஷலாக காமன் டிபி வெளியாகியுள்ளது. இதனை மெர்சல் பட இயக்குநரும், விஜயின் தீவிர ரசிகனுமான அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காமன் டிபியை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
இதுவரை, சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு இருக்கும் விஜயின் இந்த ஸ்பெஷல் டிபியை இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். இந்தியாவில் நடிகரின் ஒரு டிபி அதிகமுறை பகிரப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
