Tamil Cinema News | சினிமா செய்திகள்
சவுதியில் சாதனை படைக்க போகும் ஒரே இந்திய திரைப்படம் 2.0!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 2.0 இந்த படத்தில் ரஜினி நடித்துள்ளார் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார் இந்த படத்தின் முதல் பாகம் பிராமாண்டமாக வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும்.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோலாகலமாக பிரமாண்டமாக கொண்டாடினார்கள் படக்குழு.தற்பொழுது 2.0 வெளியாகி மாபெரும் சாதனையை படைக்கும் என தெரிகிறது.
சவுதியில் திரையரங்கமே மூடி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆம் அதாவது 1977 ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு திரையரங்கமாக மூடிக்கொண்டே வந்தன பின்பு 1980 ம் ஆண்டில் மொத்த திரையரங்கமும் மூடப்பட்டன.
இதுவரை 40 ஆண்டுகள் ஆகிவிட்டன சவுதியில் திரையரங்கம் மூடி ஆனால் தற்பொழுது அனைத்து திரையரங்கமும் திறக்க முடிவு செய்துள்ளார்கள் சவுதி அரசு.இதற்க்கான அனைத்து நடவடிக்கையும் பரபரப்பாக எடுத்துவருகிறார்கள்.
இதை தொடர்ந்து மார்ச் மாதம் அனைத்து திரையரங்கமும் திறக்க படவுள்ளன,அதேபோல் ஏப்ரல் மாதம் ரிலீசாகவுள்ள 2.0 படத்தை சவுதியில் அனைத்து திரையரங்கத்திலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அதற்க்கான அனைத்து நடவடிக்கையும் பரபரப்பாக எடுத்துவருகிறார்கள் படக்குழு மேலும் சவுதியில் முதன் முதலாக திரையிடப்படும் இந்தியப்படம் என்ற பெருமையை 2.0 படம் பெற்றுள்ளது அதனால் ரஜினி வரலாறு படைக்கபோகிறார் என ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
