Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று T20 போட்டிகளில் விளையாடுகிறது முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. மூன்றாவது T20 போட்டி பிரிஸ்டாலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

england-v-india
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராய் மற்றும் ஜோஸ்பட்லர் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்க்கு 7.5 ஓவர்களில் 94 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய ராய் 31 பந்துகளில் நான்கு ஃபோர்கள் மற்றும் ஏழு சிக்சர்களுடன் 67 ரன்கள் சேர்த்தார்.
பின்பு வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான் 3 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்பு ரோஹித் ஷர்மா உடன் ஜோடி சேர்ந்த விராட்கோஹ்லி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் பதினொன்று பௌண்டரிகள் ஐந்து சிசிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து தனது சத்தத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 2-1 என்கிற விகிதத்தில் T20 தொடரை வென்றது.
