ஐ.சி.சி டி.20 தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி 2வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

புதிய தரவரிசைப் பட்டியலின்படி, 6 புள்ளிகளை இழந்த இந்தியா தற்போது 118 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில் நியூஸிலாந்து 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 121 புள்ளிகளுடன் முறையே 2-ஆவது மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளன.

இதில் இங்கிலாந்து 7 புள்ளிகளை கூடுதலாகப் பெற்றதன் மூலமும், பாகிஸ்தான் 5 புள்ளிகளைப் பெற்றதனாலும் தங்களது தற்போதைய இடத்துக்கு வந்துள்ளன. நியூஸிலாந்து 2 புள்ளிகளை இழந்தபோதும் முதலிடத்திலேயே தொடருகிறது.

ஆப்கானிஸ்தான் 90 புள்ளிகளுடன் 9-ஆவது இடம், வங்கதேசம் 78 புள்ளிகளுடன் 10-ஆவது இடம் வகிக்கின்றன.