fbpx
Connect with us

2017 இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் தெரியுமா உங்களுக்கு..!! மலைக்கவைக்கும் பட்டியல்.!

News | செய்திகள்

2017 இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் தெரியுமா உங்களுக்கு..!! மலைக்கவைக்கும் பட்டியல்.!

இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தாண்டு இதுவரை சிறந்த ஆண்டாகவே இருக்கிறது. இந்தாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை முழுமையாக வென்ற இந்திய அணி,

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடந்த டெஸ்ட் தொடரையும் வென்றது. அதன்பின், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

cricket

இருப்பினும், இலங்கையை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் வீழ்த்தியது.

தொடர் வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களின் லேட்டஸ்ட் சம்பளம் என்னவென்று இங்கு பார்ப்போம். பிசிசிஐ-யின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களின் வருட சம்பளம் இது,

கிரேட் A: விராட் கோலி, தோனி, அஷ்வின், ரஹானே. புஜாரா, ஜடேஜா, முரளி விஜய் ஆகிய வீரர்கள் வருடத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்குகின்றனர்.

cricket

கிரேட் B: ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புவனேஷ் குமார், முஹமத் ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ரிதிமான் சாஹா, ஜஸ்ப்ரித் பும்ரா, யுவராஜ் சிங் ஆகிய வீரர்கள் வருடத்திற்கு ஒரு கோடி சம்பளம் பெறுகின்றனர்.

கிரேட் C: தவான், அம்பதி ராயுடு, அமித் மிஷ்ரா, மனீஷ் பாண்டே, அக்சர் படேல், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, ஆசிஷ் நெஹ்ரா, கேதர் ஜாதவ், யுவேந்திர சாஹல், பார்த்திவ் படேல், ஜெயந்த் யாதவ், மந்தீப் சிங், தவல் குல்கர்னி, ஷர்துல் தாகுர், ரிஷப் பண்ட் ஆகியோர் வருடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குகின்றனர்.

india

ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள விவர பட்டியலை பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக கேப்டன் கோலிக்கு ரூ.44 கோடியை பெற்றுள்ளார்.

அனில் கும்ப்ளே ரூ. 48,75,000 லட்சம், விராட் கோஹ்லி ரூ.44 கோடி, ரோஹித் சர்மா ரூ. 1.12 கோடி, மனீஷ் பாண்டே ரூ. 29,70,112 லட்சம், சுரேஷ் ரெய்னா ரூ. 32,82,757 லட்சம், அமித் மிஸ்ரா ரூ. 42, 20,689 லட்சம், புவனேஷ்வர் குமார் ரூ. 67,99,997 லட்சம், உமேஷ் யாதவ் ரூ. 83,63,214 லட்சம்,ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.34,79,729 லட்சம், முரளி விஜய் ரூ. 34, 79,729 லட்சம், மற்றும் கே.எல்.ராகுல் ரூ. 42,20,689 லட்சம் ஊதியமாக பெற்றுள்ளனர்.

2017 போட்டிகளின் அம்பயர் மற்றும் ரெபிரீகளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவரங்கள் காண்போரை வாய்பிளக்க வைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top