fbpx
Connect with us

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் கிரிக்கெட் திருவிழா…

News | செய்திகள்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் கிரிக்கெட் திருவிழா…

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்காக மாபெரும் கிரிக்கெட் திருவிழா காத்துகொண்டிருகிறது . ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மோதும் பரபரப்பான போட்டிகளை வரும் நாட்களில் காணலாம்.இம்மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள், 3 ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 17ல் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. அடுத்தடுத்த போட்டிகள் கோல்கட்டா (செப். 21), இந்துார் (செப். 24), பெங்களூரு (செப். 28), நாக்பூரில் (அக்.1) நடக்கும். மூன்று ‘டுவென்டி-20’ போட்டிகள் முறையே ராஞ்சி (அக்.7), கவுகாத்தி (அக். 10), ஐதராபாத்தில் (அக். 13) அரங்கேறும்.

நியூசி., எப்போது: இதன்பின், இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள், 3 ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் இரண்டு பயிற்சி போட்டிகளில் (அக். 17, 19- மும்பை) விளையாடுகின்றன. முதல் ஒரு நாள் அக்டோபர் 22ல் மும்பையில் நடக்கவுள்ளது.

பின், புனே (அக். 25), கான்பூர் (அக். 29) நகரங்களில் அடுத்தடுத்த போட்டிகள் நடக்கும். ‘டுவென்டி-20’ தொடரின் முதல் போட்டியை நவம்பர் 1ல் டில்லியில் கிரிக்கெட் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

இரண்டாவது, மூன்றாவது போட்டிகள் முறையே ராஜ்கோட் (நவ.4), திருவனந்தபுரத்தில் (நவ. 7) நடக்கவுள்ளன. கவுகாத்தி (அக். 10), திருவனந்தபுரம் (நவ.7) மைதானங்களில் முதல் முறையாக போட்டிகள் நடக்கும்.

வரும் 17ல் ஆஸ்திரேலிய தொடர் துவங்குகிறது. நவம்பர் 7ல் நியூசிலாந்து தொடரின் கடைசி ‘டுவென்டி-20’ நடக்கவுள்ளது. இதனால், சுமார் 50 நாட்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது இதில் எது வெற்றிபெறும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top