பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், பதவியேற்று 100 நாட்களை ஆனதைக் கொண்டாடும் வகையில் ஹாரிஸ்பர்க் நகரில் சனிக்கிழமையன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய ட்ரம்ப், “பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா பல பில்லியன்களை செலவளிக்கிறது. ஆனால், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் ஒன்றும் செய்யவில்லை. இனிமேல் செய்யப்போவதுமில்லை” என்று குறிப்பிட்டார்.

அதிகம் படித்தவை:  சர்க்கார் விஜயை பார்த்து வியந்து, தீபாவளியை சீக்கிரம் வா என கூப்பிடும் '96 பட இளம் வயது ஜானு.

மேலும், பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக முக்கியமான முடிவை அடுத்த இரண்டு வாரங்களில் எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகம் படித்தவை:  த்ரிஷாவின் “மோகினி” ஸ்னீக் பீக் வீடியோ !

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டு ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.