Sports | விளையாட்டு
இந்தியாவை தோற்கடித்து சமன் செய்த ஆஸ்திரேலியா..! மூன்றாவது டெஸ்ட் போட்டியின் விவரம்!
இந்தியாவை தோற்கடித்த அவுஸ்திரேலியா அணி!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 326 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 243 ரன்கள் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முகமது சமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதை அடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. இந்திய அணிவெற்றி பெற 287 ரன்கள் எடுக்க வேண்டும் . ஆனால் இந்திய ரன் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸ் ஆஸ்திரேலிய வீரர்கள்
- ஹாரிஸ் 70,
- மார்ஷ் 45,
- பின்ச் 50,
- ட்ராவிஸ் ஹெட் 58, ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்கள், பும்ரா, உமேஷ் யாதவ், ஹனுமா ஆகியோர் 2 விக்கெட்கள் எடுத்து இந்திய அணிக்கு உதவினர். இந்திய அணியில் கோலி 123ரன்கள், ரஹானே 51 ரன்கள் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்கள் எடுக்க உதவினர்.
மற்ற வீரர்கள் யாரும் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அதனால் தொடர்ந்து விக்கெட்டுகள் பறிபோனது இது இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமாக காணப்பட்டது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் 5 விக்கெட்கள் வீழ்த்தி தன் திறமையைக் காட்டினார்.
இந்திய அணியில் ஷமி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா 3, இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர் இந்தியா வெற்றி பெற பெரும்பங்கு வகித்தனர் ஆனால் இருப்பினும் இந்தியா தோல்வி அடைந்து இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஒன்னுக்கு ஒன்னு எனும் சமநிலையில் உள்ளனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட்போட்டியில் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் மூன்றாவது ஆட்டம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது மெல்போர்ன் நகரில். இது மட்டுமில்லாமல் விராட் கோலி 1000 ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
