India | இந்தியா
அடிக்கிற காற்றுக்கும் பட்ஜெட் போட்டாச்சி.. பட்ஜெட் 2020 முழு விவரம்
இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகும் இந்த நிலையில் இந்த வருடத்தின் பட்ஜெட்டின் முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையில்,
தனிநபர் வருமானவரி குறைப்பு. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20% இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 7.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி 20% இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

budget
கல்வித் துறைக்காக 99,300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கான (Deposit) காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புற பெண்களின் மேம்பாட்டிற்காக ‘தான்ய லட்சுமி’ திட்டம் தொடங்கப்படும். 5 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும் சிறு, குறு நிறுவனங்களுக்கு தணிக்கை இல்லையாம்.
காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ₹30,757 கோடியும், லடாக் யூனியன் பிரதேச வளர்ச்சிக்கு ₹5,958 கோடியும் ஒதுக்கீடு. சுற்றுலாத்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
தேசிய நெசவுத்தொழில் திட்டத்திற்கு 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சுத்தமான காற்று திட்டத்திற்கு 4,150 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளதாம். மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு ரூ. 9500 கோடி ஒதுக்கீடு.
ஆதார் கார்டின் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
