Photos | புகைப்படங்கள்
மொட்டை மாடியில் வேற லெவலில் போட்டோ ஷூட்! கப்பு நிச்சயம் இந்துஜா
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட்.
இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.
பக்கத்து வீட்டு பெண் போல இருந்தவர், பாய் கட், கோச்சை எதிர்ப்பது, பின் புரிந்துக்கொண்டு செய்லபடுவது, கிளைமாக்சில் அசத்தல் நடிப்பு என இவரது சினிமா வாழ்க்கையில் பிரேக் த்ரூ தான் அந்த வேம்பு கதாபாத்திரம்.
இவர் விநாயகர் சதுர்த்தி அன்று பதிவிட்ட போட்டோஸ் இணையத்தில் செம்ம ஹிட். சிகப்பு கலர் புடவையில் இவர் எடுத்துள்ள இந்த போட்டோஸ் வேற லெவெலில் உள்ளது.

Indhuja

Indhuja
அசத்தலான காமெராவின் லென்ஸ் இந்துஜாவை அம்சமாக படம் பிடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
