Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்டைலிஷாக கிளாமர் தூக்கலாக இந்துஜா பதிவிட்ட போட்டோ! பங்கமாய் கலாய்த்த பிகில் புல்லிங்கோ
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட்.
இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது.
பக்கத்து வீட்டு பெண் போல இருந்தவர் பிகிலில் பாய் கட், கோச்சை எதிர்ப்பது, பின் புரிந்துக்கொண்டு செய்லபடுவது, கிளைமாக்சில் அசத்தல் நடிப்பு என இவரது சினிமா வாழ்க்கையில் பிரேக் த்ரூ தான் அந்த வேம்பு கதாபாத்திரம்.

bigil-indhuja-2
இவர் காரில் அமர்ந்த படி ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் மற்றும் கூலர்ஸ் அணிந்த போட்டோவை பதிவிட்டார். பலரும் இந்த சேஞ் ஓவரை பார்த்து வியந்தனர். போட்டோவும் வைரலானது. பிகில் படத்தில் உடன் நடித்த வர்ஷா, காயத்ரி ஆகியோர் செல்லமாய் கலாய்த்துள்ளனர்.

instagram comments
ரசிகர்கள் பலர் என்னடா பிரியங்கா சோப்ரா ரேஞ்சுக்கு மாறிட்டாரே இந்துஜா, என கமெண்ட் செய்து வருகின்றனர்.
