Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆதர்வாவுடன் இணையும் மேயாத மான் இந்துஜா.! எந்த படத்தில் தெரியுமா?

அதர்வா முரளியின் அடுத்த படம் ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அவர்களுடன் தான். இப்படத்திற்கு பூமராங் என தலைப்பு வைத்தனர் படக்குழு. இப்படத்தை ஆர்.கண்ணன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார்.

atharvaa murali

கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி, இந்துஜா ஆகியோர் நடிக்கவுள்ளனர். வில்லன் வேடத்தில் ‘ஐ’ பட புகழ் நடிகர் உபேன் படேல் நடிக்கவுள்ளார். ரதன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

indhuja

இந்த நிலையில் மேயாத மான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை இந்துஜா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இவரின் முதல் படத்திலேய ரசிகர்களை கவர்ந்ததால், அவரை இந்த படத்தில் ஒரு சவாலான வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தோம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top