Connect with us

Cinemapettai

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு இந்த இரண்டு ஜாம்பவானின் பெயரை வைக்கலாம்- வைரலாகுது மான்டி பனேசரின் பதிவு

Sports | விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு இந்த இரண்டு ஜாம்பவானின் பெயரை வைக்கலாம்- வைரலாகுது மான்டி பனேசரின் பதிவு

மான்டி பனேசர் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான பெயர். இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர். இவரது டர்பன், தாடி இரண்டிற்கும் ஒரு காலகட்டத்தில் பெரிய ரசிகர் வட்டம் உண்டு. பந்துவீச்சில் கலக்கினாலும் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்புவார். அதனை கிண்டல் செய்ய என்றே ஒரு கூட்டம் உண்டு. பல செல்ல பெயர்கள் உண்டு இவருக்கு. எனினும் சர்வேதச கிரிக்கெட் கொடுத்த அழுத்தம் காரணமாக மன உளைச்சலில் அவதிப்பட்டார். அதன் பின்பு இவர் கிரிக்கெட் கேரியர் சரிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அதன் பின்பு தான் இங்கிலாந்துடன் ஆடி வருகின்றனர். முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா டீம், நாளை இரண்டாவது போட்டியில் ஆடுகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை ‘பார்டர் – கவாஸ்கர் ட்ராஃபி’ என அழைக்கப்படுவது வழக்கம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டன்களை பெருமை படுத்து விதமாக கடந்த 15 வருடங்களாக இந்த இரண்டு டீம்களும் ஆடும் கோப்பையை குறிப்பிட்டு வருகின்றனர்.

அதே போல, இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட் தொடரை “டெண்டுல்கர்- குக் டிராஃபி” என்று அழைக்க வேண்டும், ஏனெனில் இருவரும் தங்கள் நாட்டிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் எடுத்துள்ளனர். பல போட்டிகளில் இருவரும், ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளனர். மேலும், டெண்டுல்கர் ஒரு ஜாம்பவான் என்பது நமக்குத் தெரியும். அவர் பெயரில் எந்த சீரிஸும் இல்லை.” என ட்விட்டரில் பதிவிட்டார்.

ind vs eng

மேலும், மான்டி பனேசர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா- இங்கிலாந்து இடையேயான தொடருக்கு யார் பெயரை வைக்கலாம் என, ஒரு வாக்கெடுப்பையும் நடத்தியுள்ளார். அதில் அதிகமானோர் ‘டெண்டுல்கர் – குக் டிராஃபி’ என்பதையே தேர்வு செய்துள்ளனர்.

ind vs eng poll

அடுத்தபடியாக கபில் – போதம் கோப்பை அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இந்த பதிவு பலரது ஆதரவை பெற்று வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top