Connect with us
Cinemapettai

Cinemapettai

Hollywood | ஹாலிவுட்

இன்க்ரீடிபிள்ஸ் 2 திரைவிமர்சனம் !

இன்க்ரீடிபிள்ஸ்

இந்த படம் 2004 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதனை இயக்கிய “பிராட் பர்ட்” தற்பொழுது 14 வருடங்கள் கழித்து இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியுள்ளார். இவர் தான் Ratatouille, Mission: Impossible – Ghost Protocol, Tomorrow land போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.

கதை

incredible

விட்ட இடத்தில் இருந்து மூன்று மாதம் கழித்து தொடங்குறது படம். பாங்க் திருட்டை தடுக்க நம் சூப்பர்ஸ் குடும்பம் முயற்சி எடுத்து தோல்வி அடைகிறது. மீண்டும் சூப்பர்ஸ் தடை செய்யப்படுகிறார்கள். அந்த நேரத்தில் தொழிலதிபர் பிரோஜன் வாயிலாக தொடர்பு கொள்கிறார். தொழிலதிபரும் அவற்றின் சகோதரியும் முதலில் எலாஸ்டிக் கேர்ள் வைத்து மீண்டும் இந்த சூப்பர் ஹீரோக்களின் இமேஜை உயர்த்துவது தான் திட்டம்.சாகசங்கள் செய்ய மனைவி கிளம்பியதும், வீட்டில் குழந்தைகளை பார்க்கும் வேலை நம் ஹீரோ வசம் சென்று விடுகிறது. அதன் பின் யார் வில்லன், எப்படி அசம்பாவிதம் நடப்பதை தவிர்ப்பது தான் மீதி கதை.

incredible

சினிமாபேட்டை அலசல்

அருமையான க்ராபிக்ஸில் வந்துள்ளது இப்படம். எந்த ஒரு இடத்திலும் நெருடல் துளியும் இன்றி படத்தை எடுத்துள்ளது இந்த டீம். சிறுவர்களுக்கான படம் என நாம் ஒதுக்கி விட முடியாதபடி பெரியவர்களும் பார்க்கும் படி சுவாரஸ்யமாக உள்ளது படம்.

பிளஸ்

அனிமேஷன், இசை, ஜாக் – ஜாக் செய்யும் காமெடி.

incredibles

மைனஸ்

சென்ற பார்ட்டில் நம் ஹீரோவை அழைத்து வேலை கொடுப்பார், பின்னர் அதே நபர் தான் வில்லன். அதே போன்று இந்த பகுதியையும் அமைத்துள்ளது சற்றே நெருடலாக தோன்றுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்

இரட்டை அர்த்த வசனம், கிளாமர் என்று எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று ரசித்து வர ஏற்ற படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 4 / 5
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top