Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதனால் புகை பிடிப்பவர்களை காட்டிலும் அதிக பாதிப்பு.. அதிர்ச்சி ஆய்வு
முதலில் உடற்பயிற்சி நன்மைகளைப் பார்ப்போம்; உடற்பயிற்சி செய்வதால் தசைகள் விரிவடையும் நல்ல முறையில் தூக்கம் வரும் அதுமட்டுமில்லாமல் சோர்வு நீங்கி நல்ல ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் இப்படி உடற்பயிற்சி நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இப்போது உள்ள எந்திர வாழ்க்கையில் பெரும்பான்மையான மக்கள் உடற்பயிற்சி செய்வதில்லை இதனால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே
சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகள் எல்லாம் புகைபிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் ஆனால் இதைவிட உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் அதிகம் என்பதை நம்ப முடிகிறதா?! ஆம் அப்படித்தான் சொல்கிறது அமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லாண்ட் மருத்துவ மையம்.
கிளீவ்லேண்ட் 1991 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒரு ஆய்வை மேற்கொண்டது இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர் அவர்களுக்கு டிரெட்மில் பரிசோதனை உட்படுத்தப்பட்டது கூடவே இதயத்துக்கான பயிற்சி மற்றும் ஏரோபிக் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஆய்வின் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 70 வயதைத் தாண்டிய உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரியவர் ஏரோபிக் பயிற்சி மூலம் உடல் ரீதியாக அதிக பயன் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு நாளில் இவ்வளவு மணி நேரம்தான் பயிற்சி செய்யவேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லாமல் விரும்பும் போதெல்லாம் ஏரோபிக் பயிற்சிகள் செய்யலாம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க்ளீவ்லேண்ட் கிளினிக்கின் மூத்த இதய நோய் நிபுணர் வீல் ஜெபர் இந்த ஆய்வு குறித்து கூறும்போது ஏரோபிக் பயிற்சிகள் மற்ற பயிற்சிகளை காட்டிலும் சிறப்பு வாய்ந்தவை மேலும் உடற்பயிற்சியை பொருத்தவரை அதி தீவிர பயிற்சி என்று எதுவும் இல்லை ஆனால் பயிற்சியே செய்யாமல் இருந்தால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை காட்டிலும் அதிகமாக இருக்கும். இந்த ஆய்வின் முடிவு நாங்களே எதிர்பாராததுதான் என்று கூறுகிறார்.
