fbpx
Connect with us

காய்ச்சலால் 111 குழந்தைகள் இறப்பு.. அரசின் நடவடிக்கை என்ன.. ஆங்கில மருந்துகள் எங்கே போனது?

bihar-child-death

India | இந்தியா

காய்ச்சலால் 111 குழந்தைகள் இறப்பு.. அரசின் நடவடிக்கை என்ன.. ஆங்கில மருந்துகள் எங்கே போனது?

மூளைக் காய்ச்சலால் 110க்கும் மேற்பட்ட குழந்தைகள் பீகாரில் பலியாகினர். இதற்கு அந்த மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். அதன் முதல்வர் நிதிஷ்குமார் பதில் சொல்ல வேண்டும் என அவர் மீது வழக்குப் போட்டுள்ளனர்.

பீகாரில் கடும் வெயில் காரணமாக தண்ணீர் இல்லை மேலும் இந்த நேரத்தில் நோய்கள் தொற்றிக் கொண்டதால் அது குழந்தைகள் பலி கொண்டு கொண்டே இருக்கின்றன. போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்றால் அதற்கு மத்திய அரசு என்ன மாற்று செய்கிறது என்று தெரியவில்லை.

ஆங்கில மருந்துக் கம்பெனிகள் இதற்கான மருந்துகளை வைத்திருப்பார்கள் ஆனால் அதற்கான செலவுகள் அதிகமாகும். அதனால் ஏழை மக்கள் உயிர் விட வேண்டியதுதானா?

அரசாங்கத்திடம் இல்லாத மருந்து தனியார் மருந்து நிறுவனத்தில் மட்டும் இருப்பது ஏன்? அரசு மருத்துவமனையில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை என்றால் ஏழை மக்கள் வேறு எங்கு செல்வார்கள்.

இதற்கு கண்டிப்பாக அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் பதில் சொல்லியே ஆகவேண்டும். 111 குழந்தைகள் இறந்து விட்டது. அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இனிமேல் வராமல் தடுக்க வேண்டும் அதற்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top