Tamil Nadu | தமிழ் நாடு
சென்னையில் ஒரே நாளில் 11 இடங்களில் செயின் பறிப்பு.. ஊர் முழுக்க கேமரா வைத்து என்ன பிரயோஜனம்
சென்னையில் மீண்டும் பல இடங்களில் அதிகரித்த செயின் பறிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள். அதுவும் ஒரே நாளில் 11 இடங்கள் இந்த திருட்டு நடந்துள்ளது. விவரம் கீழே
சென்னையில் அண்மைக்காலமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதையடுத்து செயின் பறிப்பு செல்போன் பறிமுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை 5.30மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள இந்திரா நகரில் 75 வயது பாலம்மாள் என்ற மூதாட்டி நடந்து வந்துள்ளார். அப்போது மோட்டார் வாகனத்தில் வந்த தனி நபர் ஒருவர் கழுத்தில் இருந்த 3.5 செயினை பறித்து சென்றுள்ளார்.
அடுத்ததாக திருவல்லிக்கேணி பேயாழ்வார் தெருவில் காலை 8.20மணி அளவில் சுதாதேவி சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது அவரிடம் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
ராயப்பேட்டை மயிலாப்பூரில் உள்ள ராதா கிருஷ்ணபுரம் தெருவில் காலை 9 மணி அளவில் சாந்தா என்பவர் நடந்து வந்துள்ளார். அவரிடமிருந்து 1 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுபோல் ராயப்பேட்டை, கொடுங்கையூர், ஆதம்பாக்கம் ,சூளைமேடு ,எழும்பூர், தேனாம்பேட்டை ,வில்லிவாக்கம் போன்ற பதினோரு இடங்களில் நேற்று ஒரு நாள் மட்டும் செயின் பறிப்பு மொபைல் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தற்போது சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
